சேலம் மாவட்டம், ஏற்காடு, தமிழகத்தில் குறிப்பிடதக்க சுற்றுலாத் தலமாகும். இங்கு விடுமுறை தினம் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், விரும்பி செல்லும் இடங்களில் படகு இல்ல ஏரி, அண்ணா பூங்கா ஒன்றாகும். இந்த படகு இல்ல ஏரியில் நடந்து, அண்ணா பூங்கா செல்லும் சாலையில் உள்ள, ஏற்காடு ஒன்றிய திறந்த வெளி மேடை அமைக்கப்பட்டுள்ள ஏற்காட்டின் முக்கிய இடத்தில் பன்றிகள் கூட்டம்,கூட்டமாக உலா வருகின்றன.
இதனால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், இங்கு வசிக்கும் பொதுமக்களும் முகம் சுழிக்கின்றனர். தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும், இந்த இடம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மிகவும் அருகிலேயே உள்ளது. இந்த வழியாகதான் ஏற்காடு வட்ட வளர்ச்சி அலுவலர்கள், ஏற்காடு தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தினசரி செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த சுகாதார சீர்கேட்டை கண்டும், காணாமலும் இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-நவீன் குமார்.