ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவு! – உத்தரவின் உண்மை நகல்!

Voter-Card-linking-with-Aadhar-Card

அரசு திட்டங்களை பெற ஆதார் எண் அவசியம் இல்லை என 11.08.2015 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் அல்ல! மத்திய அரசின் மூர்க்கத்தனத்திற்கு முற்றுப்புள்ளி! -உச்ச நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்!– என்ற தலைப்பில் நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் 12.08.2015  அன்று விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில் வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது என, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

NERPAP-AADHAAR_14082015_000001 NERPAP-AADHAAR_14082015_000002

வாக்காளர் அடையாள அட்டையுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை  நிறுத்துமாறும், தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும், ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com