திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள புனித ஜெயராக்கினி மாதா ஆலய பெருவிழாவிற்காக, கடந்த வாரம் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.
06.08.2015 முதல் 13.08.2015 வரை திருப்பலியும், சிறிய தேர் பவனியும் நடைப்பெற்றது.
இதில் பங்குத்தந்தை அருட்திரு.L.குழந்தைசாமி, உதவிப் பங்குத்தந்தை அருட்திரு. J.ஜஸ்டின் குழந்தைராஜ், விழாக் குழுவினர், அருட்சகோதரிகள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்று (14.06.2015 வெள்ளி) மாலை 6.00 மணிக்கு திருப்பலியும் மற்றும் இரவு 8.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இப்பெருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-பு.மோகன்ராஜ்.