இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்!வேட்பாளர்களுக்கு, தேர்தல் ஆணையர் கடும் எச்சரிக்கை!

elections-secretariat-of-sri-lanka

ஸ்ரீலங்கா தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.

ஸ்ரீலங்கா தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 17.08.2015  தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் முடிவுகள், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் 4 மணியளவில் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

வாக்களிப்பு நிலையங்களில் பதிவான வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததும், நாளை இரவு 9 மணியளவில், வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

முதலில் தொகுதி ரீதியான முடிவுகள் வெளியிடப்படும். அதையடுத்து, மாவட்ட ரீதியான முடிவுகளும், இறுதியில் தேசிய அளவிலான முடிவுகளும் அறிவிக்கப்படும்.

நாளை மறுநாள் நண்பகல் அளவில், தேசிய அளவிலான இறுதியான முடிவுகள் வெளியிடப்படும். அதன் பின்னர், நாளை மறுநாள் இரவு, விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்பது நாட்டில் அனைவரும் இணைந்து ஒன்றாக கொண்டாட வேண்டிய தேசிய விழா. எனினும் அனைவரும் தேர்தல் விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.  மீறினால் சட்டம்  தன் கடமையை செய்யும்.

தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்களுக்கு, மதிய உணவு காவல் நிலையத்திலும், இரவு உணவு சிறைச்சாலையிலும் வழங்கப்படும் என, ஸ்ரீலங்கா தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

  -வினித்.