தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணா துரை தலைமையில் ஏற்காடு டவுண், காந்தி பூங்கா அருகில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் கலந்து கொண்டு தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்.
தமிழகத்தில் மற்ற கட்சிகள் ஆட்சி செய்த போது, கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் கிடையாது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து, அ.தி.மு.க. அரசிற்கு எதிராக பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இவை அனைத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுபடாது.
எனவே, வரும் 2016 தேர்தலிலும் அ.தி.மு.க.வின் ஆட்சியே தமிழகத்தில் மலரும். இந்த ஏற்காடு ஒன்றியமானது அ.தி.மு.க. கட்சியின் எஃகு கோட்டை, இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரோஜா, ஏற்காடு டவுண் ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஏற்காடு முன்னாள் ஒன்றிய செயலாளர் பிலிப்பான், மாணவரணி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மனோ, பாலு, அன்பு, முருகன், விஜய் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏற்காடு பொதுமக்களிடையே அரசின் நான்காண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை அ.தி.மு.க.வினர் விநியோகித்தனர்.
-நவீன் குமார்.