மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நடத்திய கைதி!

mainpage.jpg

nimhans

கர்நாடகா காவல்துறையினர், மனநலம் பாதிக்கப்பட்ட கைதி ஒருவரை பரிசோதனைக்காக, பெங்களூரில் உள்ள National Institute of Mental Health and Neuroscience (NIMHANS) மனநல மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

இன்று (16.08.2015) மாலை 3 மணியளவில் போலீஸிடமிருந்த துப்பாக்கியை பறித்த கைதி, 7 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. காவல்துறையினரின் கவனக்குறைவே  இச்சம்பவத்திற்கு காரணம் என்று தெரிகிறது. 

துப்பாக்கியால் சுட்ட கைதியின் பெயர் விஸ்வநாத் என்பதும், இவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கே.மாதவன்.