சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கொம்புதூக்கி கிராமத்தில் அமைந்துள்ள மாண்ட்போர்ட் சமுதாய மேல்நிலைப்பள்ளியின் 15 ஆவது விளையாட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜெயரத்னா மற்றும் கிருத்திகா ஜெயரத்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கினர்.
ஏற்காடு மாண்ட்போர்ட் சபை தலைவர் கே.ஜே.ஜார்ஜ் முன்னிலை வகித்தார். விளையாட்டு விழா மாணவ, மாணவிகளின் அணிவகுப்புடன் துவங்கியது. பின்னர் நடந்த மாணவர்களின் உடலசைவு கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
மேலும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
அணிவகுப்பில் சிறந்த அணியாக சாரணர் மற்றும் சேரன் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் மாண்ட்போர்ட் பள்ளி இயக்குனர் சகோ.அகஸ்டின் நோவெல்லா, ஏற்காடு பங்கு தந்தை இன்னாசிமுத்து, அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.