ரூ.1,700 கோடி ஊழல் செய்த லலித் மோடியை களமிறங்கி காப்பாற்றுகின்றனர்!- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேது மாதவன் குற்றச்சாட்டு!

ye2308P1

ஏற்காடு ஒன்டிக்கடை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனைக் கூட்டம், ஏற்காடு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேது மாதவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி என்றும், 1700 கோடி ஊழல் செய்த லலித் மோடியை வெளியுறவு துறை அமைச்சரும், ராஜஸ்தான் முதலமைச்சரும் நேரடியாக களமிறங்கி காப்பாற்றுகின்றனர்.

கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்களுக்கு தலா பத்தாயிரம் தருவதாக கூறியது நடக்கவில்லை என்று இவர் கூறினார்.

மேலும், கூட்டத்தில் மாரமங்களம் கிராமத்தில் 6 ஆம் நம்பர் பீல்டு வழியாக மேனாங்குழி காடு வரை சாலை அமைக்க வேண்டும்.

ஏற்காடு உள்ளுர் வாசிகளுக்கு சுங்கவரி கிடையாது என்ற அரசாணை குறித்த விளம்பர தட்டியை ஏற்கட்டில் உள்ள இரண்டு டோல்கேட்டின் அருகிலும் ஏற்காடு பி.டி.ஓ. வைக்க வேண்டும்.

கீரைக்காடு கிராமத்திற்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

பட்டிப்பாடி பஞ்சாயத்தின் செங்கொடி நகருக்கு குடிநீர்,மின் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.

சுற்றுலா தலமான ஒன்டிக்கடை, அண்ணா பூங்கா , காந்தி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.

ஏற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கூட்டத்தில் ஏற்காடு நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, கண்ணாடிராஜ், ராஜேந்திரன், குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.    

   – நவீன் குமார்.