நடிகரும், ‘துக்ளக்’ இதழின் ஆசிரியருமான சோ @ ராமசாமி மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு உடல் நிலை தேறியதும் அவர் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பி, அங்கிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சோ @ ராமசாமிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று மதியம் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
-கே.பி.சுகுமார்.