திருச்சியில் போக்குவரத்து பிரச்சனை: காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்ததை!

TRAFIC.jpg3 TRAFIC.jpg2 TRAFIC.jpg1 TRAFICதிருச்சி பழைய பால்பண்ணை அருகே திருச்சி-தஞ்சை சாலையில் பேருந்து நிறுத்தம் அமைக்கபட்டு தயாரான நிலையில் உள்ளது.

ஆனால் அந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தாமல் ஆங்காங்கே சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதை அறிந்த அப்பகுதி மக்கள், இதை வலியுறுத்தி நாளை சாலை மறியலில் ஈடுபடும் முயற்சியில் மக்களை திரட்டி வந்தனர். இத்தகவல் உளவுத் துறையினர் கவனத்திற்கு தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று (06.09.2015) மாலை 5.45 மணியளவில், திருச்சி போக்குவரத்து (தெற்கு) காவல்துறை உதவி ஆணையர் விக்னேஷ்வரன் தலைமையில், அரியமங்கலம் காவல் நிலைய சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் பெரியய்யா மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே முகாமிட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

மேலும், போக்குவரத்து போலிசாரை நிரந்தரமாக பணியமர்த்தி, பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல ஏற்பாடு செய்வதாக அப்பகுதி மக்களிடம் அவர்கள் உறுதியளித்தனர்.

இதனால் நாளை சாலைமறியலில் ஈடுபடும் முயற்சியை அப்பகுதி மக்கள் கைவிட்டனர்.

-கே.பி.சுகுமார்.