ஏற்காட்டில் விதிகளை மீறி கிணறு வெட்டபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்தில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
ஏற்காடு டவுன் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வரும் பொது கிணறுக்கு 10 மீட்டர் தொலைவில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், பொது கிணறு உள்ள இடத்தின் 100 மீட்டர் சுற்றளவில் கிணறு, போர்வெல் அமைக்ககூடாது என்பது குறித்தும், ஏற்காடு வருவாய் ஆய்வாளரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு ஆர்.ஐ.கணேசன் மற்றும் வி.ஏ.ஓ.பாஸ்கர் ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்து ஏற்காடு வட்டாட்சியரிடம் அறிக்கை அளித்து இந்த விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.
-நவீன் குமார்.