பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த படத்துக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் அமைச்சர்கள் பலரும், பேரறிஞர் அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது, அண்ணா பிறந்த நாள் சிறப்பு மலரை, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட, அதை அமைச்சர் தங்கமணி பெற்று கொண்டார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com