இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காக அமெரிக்கா ரூ.363 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
இன்று காலை இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீதித்துறை மேம்பாடு மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பான விசயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தமொன்றில் அமெரிக்காவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.
வெளிவிவகாரத்துறை பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
-வினித்.