இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கல்!-இந்தியா ஆதரவு!-(ஆடியோ)

un

United-Nations-Office-

 

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டு, அது மனித உரிமை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானத்தில், “இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல் பற்றி காமன்வெல்த் நாடுகள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. தீர்மானத்தில் மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இருந்தும் இந்தியா அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த தீர்மானம் பற்றி யாரும் வாக்கெடுப்புக்கு கோராததால் தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

-ஆர்.மார்ஷல்.