இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாகப்பட்டினத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த அக்டோபர் 1-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், அப்பாவி மற்றும் நிராயுதபாணியாக உள்ள தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லையில் மீன் பிடிப்பது தொடர்பாக இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானது என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது 31 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com