சேலம் மாவட்டம், ஏற்காடு, கீழ் செங்காடு கிராமத்தில் சந்திரா தனது கணவர் கனகராஜ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த ஜீன் மாதம் 5-ம் தேதி தனது கணவர் வெளியூர் சென்றதால், செங்காட்டை சேர்ந்த உண்ணாமலை எனும் பெண்ணை தனக்கு துணையாக வைத்து கொண்டு அன்று இரவு இருவரும் தூங்கியுள்ளனர்.
அன்று இரவு 2 மணியளவில் 3 பேர் முகமூடி அணிந்தவாறு, சந்திரா தூங்கி கொண்டிருந்த படுக்கை அறைக்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகள் எங்கே உள்ளது? என கேட்டு, பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும், தனது கணவர் பெயரில் உள்ள துப்பாக்கியின் தோட்டாக்கள் 10–யை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்தில் சந்திரா புகார் செய்தார்.
இவ்வழக்கினை சேலம் மாவட்ட எஸ்.பி சுப்புலட்சுமியின் நேரடி கண்காணிப்பில், ஊரக டி.எஸ்.பி கண்ணன் தலைமையில், ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் மற்றும் மல்லுர் காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை விசாரித்து வந்தனர்.
தனிப்படை விசாரணையில், செங்காடு பகுதியை சேர்ந்த மகாதேவன், துரை, வெள்ளையன் ஆகியோர் முகமூடி அணிந்து திருட்டில் ஈடுப்பட்டதாகவும், அப்போது பாப்பிரெட்டியை சேர்ந்த ராசு, வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்கு வெளியே கொள்ளை சம்பவத்திற்கு காவலுக்கு இருந்ததாகவும், கொள்ளையடித்தபின் ரூ.20 ஆயிரத்தை சரிசமாக பிரித்து கொண்டனர். பின்னர் திருடிய தோட்டாக்களை செங்காடு பகுதியை சேர்ந்த சக்திவேலிடம் கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய 5 பேரையும். திருட்டு தோட்டக்களை வாங்கிய சக்திவேலையும், காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-நவீன் குமார்.