அடிப்படை வசதிகள் வேண்டி, வேலைக்கு செல்லாமல் கிராம மக்கள் வினோத போராட்டம்!

ye0810P7

ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மயானம், பஸ் நிறுத்தம், தண்ணீர் தொட்டி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, வேலைக்கு செல்லாமல், கிராம மக்கள் ஊருக்கு நடுவில் கூடி அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர்.

ஏற்காட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளக்கடை கிராமம். இந்த கிராமத்தில் பஸ்நிறுத்தம், தண்ணீர் தொட்டி, மயானம், மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அரசாங்கம் நிலம் இருந்தும் அந்த நிலங்கள் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருப்பதால், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை என்றும், இது குறித்து தாசில்தாருக்கு பல முறை மனு அளித்தும் பலனில்லை என்றும், அந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் வேலைக்கு செல்லாமல்  ஊருக்கு நடுவில் கூடி அமையதியான வழியில் போராடினர்.

இந்நிலையில் அந்த கிராமத்திற்கு வந்த சர்வேயர் சம்பத் தலைமையிலான வருவாய்துறையினர், அந்த கிராமத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படும் நிலங்களை அளந்து வட்டாட்சியரிடம் அறிக்கை அளிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர்.

-நவீன் குமார்.