காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபரின் கால் முறிந்தது!

ye0910P1

ஏற்காட்டில் ஆம்னி காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் வந்த வாலிபரின் இடது கால் முறிந்தது.

ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த பழனி முத்துவின் மகன் அணீஸ் குமார்(வயது 26). இவர் ஏற்காடு படகு இல்ல ஏரி அருகில் உள்ள ஸ்டேண்டில் வாடகை கார் ஓட்டி வருகிறார்.

இவர் இன்று காலை முருகன் நகர் பகுதியில் இருந்து பஸ் ஸ்டேண்டிற்க்கு சென்றுக் கொண்டிருந்த போது வழியில் ஒண்டிக்கடை அருகே அவ்வழியாக வந்த தனியார் தங்கும் விடுதியின் ஆம்னி காரின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளார். தூக்கி வீசப்பட்ட அணீஸ் குமாரரின் இடது கால் முறிந்தது.

அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அணீஸ் குமாரை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஏற்காடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.       

-நவீன் குமார்.