ஏற்காடு ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களின் கணவர்கள் கலந்து கொள்ளும் அவல நிலை உள்ளது.
ஏற்காடு ஒன்றிய குழு கூட்டம் ஏற்காடு வட்டார வளர்சி அலுவலகத்தில் ஏற்காடு சேர்மேன் அண்ணா துரை தலைமையில் நடைப்பெற்றது. ஏற்காடு ஆணையாளர் மயில்சாமி மற்றும் துணை பி.டி.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அலுவலக பணியாளர் அன்பழகனுக்கு தர வேண்டிய சம்பள பாக்கிக்காக உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும் வழக்கில் டெபாசிட் தொகையாக சம்பள பாக்கியில் ரூ.3 இலட்சம் கட்டுவதற்காகவும், மேலும், தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் துணை சேர்மேன் சுரேஷ்குமார், கவுன்சிலர் மணிமுத்து ஆகியோரும், பெண் கவுன்சிலர்கள் வருதாயி மற்றும் அலமேலு ஆகியோருக்கு பதிலாக அவர்களது கணவரும் கலந்து கொண்டு கூட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதுதான் நிலமை.
-நவீன் குமார்.