ஒரு லட்சம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தலைமைக் காவலர்!- பழநியில் நடந்த அதிசயம்!

தலைமைக் காவலர் ஆரோக்கியராஜ். பழநி அடிவாரம் காவல் நிலையம்.

தலைமைக் காவலர் ஆரோக்கியராஜ். பழநி அடிவாரம் காவல் நிலையம்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் ஆரோக்கியராஜ் (வயது42/ பணிஎண்:H929) த/பெ.குருசாமி, இவர் கடந்த 12-ம் தேதி எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்று கீழே கிடந்துள்ளது. இந்த பணத்தை எடுத்த ஆரோக்கியராஜ், பழநி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மூலம் பழநி டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி.ஐ. வங்கி அலுவலர்கள், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வைக்க வந்த இடத்தில் ஒரு லட்சம் ரூபாயை காணவில்லை என புகார் அளிக்க வந்துள்ளனர். அப்போது, அவர்கள் கீழே தவறவிட்ட விபரத்தை கூறி பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், பணத்திற்கு ஆசைப்படாமல் ஒரு லட்சத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆரோக்கியராஜை நேரில் வரவழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து, ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி கௌரவித்துள்ளார்.

இத்தகவலை உறுதிப்படுத்துவதற்காக இன்று (16.10.2015) மாலை 7.10 மணிக்கு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். மேற்கண்ட தகவல் அனைத்தும் உண்மை என்று அவர் கூறினார்.

அதன் பிறகு இன்று (16.10.2015) மாலை 7.48 மணிக்கு, தலைமைக் காவலர் ஆரோக்கியராஜை தொடர்பு கொண்டு நமது “உள்ளாட்சித் தகவல்” ஊடகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

ரொக்க பரிசை எஸ்.பி.யிடம் இருந்து பெற்றுக் கொண்டு, எஸ்.பி. ஆபிசில் இருந்து இரு சக்ர வாகனத்தில் வந்து கொண்டிருப்பதாக மகிழ்ச்சி பொங்க நம்மிடம் தெரிவித்தார்.

தலைமைக் காவலர் ஆரோக்கியராஜிக்கு நீங்களும் வாழ்த்து சொல்ல வேண்டுமா? 9498185995 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர் கொண்டு பேசுங்கள்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com