பேருந்து நிலை தடுமாறி, லாரி மீது மோதி தீப்பற்றியதில் 42 பேர் பலி! -பிரான்ஸ் நாட்டில் நடந்த பயங்கரம்!

Puisseguin-bus-crashbus-crash-land markfrance bus accident.JPG2france bus accident.JPG1france bus accident
FRANCE GOVT PRESS COMMUNICATION

பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள லிபோர்ன் என்ற நகருக்கு அருகில் உள்ள Puisseguin கிராமப்புறத்தில் பயணிகள் பேருந்து ஒன்று நிலை தடுமாறி லாரி மீது  பயங்கரமாக மோதி வெடித்து சிதறியதில் 42 பேர் பலியாகியுள்ளனர்.

50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, பேருந்தின் சக்கரங்கள் திடீரென நிலை தடுமாறி தாறுமாறாக சென்று எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் 60 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உயிர்பிழைத்துள்ளவர்களை காப்பாற்ற அவசர உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

-ஆர்.மார்ஷல்.