தொடர் விடுமுறையின் காரணமாக, ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

ye2510P2 ye2510P1

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, முகரம் என தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் அரசு விடுமுறை என்பதால், சுற்றுலா தலமான ஏற்காட்டில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.

இதனால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. உணவு விடுதிகள், சாலையோர கடைகள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான படகு இல்லம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, ரோஜா தோட்டம்,  லேடீஸ் சிட், சில்ட்ரண்ஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பகோடா பாயிண்ட், ஜென்ட்ஸ் சீட் உள்ளிட்ட வியு பாயிண்ட்களில் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.  

-நவீன் குமார்.