ஏற்காட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
ஏற்காடு மாரமங்களம் கிராமத்தில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஏற்காடு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. சின்னசாமி மற்றும் தலைமை காவலர் மூர்த்தி ஆகியோர் மாரமங்களம் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
சோதனையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெரிய வெள்ளையன் மகன் வெங்கடாசலம்(வயது 55) என்பவர் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி, வெங்கடாசலத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது சிறையிலடைத்தனர்.
-நவீன் குமார்.