சுகாதார விழிப்புணர்வு பேரணி !

ye2710P2

ஏற்காடு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் சுகாதாரமாக இருப்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்களை கொண்டு இன்று காலை சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

பேரணியை ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரையும், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளியும் துவக்கி வைத்தனர். 

ஏற்காடு பஞசாயத்து அலுவலகத்தில் துவங்கிய பேரணி காந்தி பூங்கா, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஏற்காடு பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

தங்கள் இடங்களையும், பொது இடங்களையும் தூய்மையாக வைத்திருப்பது குறித்து கோஷங்கள் எழுப்பினர். பேரணியில் 300-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும், ஏற்காடு கிராம பஞ்சாயத்து பி.டி.ஓ. ஜெயராமன், ஆசிரியர் ஜெரோம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.      

 -நவீன் குமார்.