நகைச்சுவை நடிகர் விவேக் மகன் பிரசன்ன குமார் காலமானார்.

நடிகர் விவேக் மகன் பிரசன்ன குமார்.

நடிகர் விவேக் மகன் பிரசன்ன குமார்.

தனது நகைச்சுவையின் மூலம் உலகமெங்கும் உள்ள தமிழர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக். தனது 13 வயது மகன் பிரசன்ன குமாரை இழந்து இன்று கண்ணீரில் தத்தளிக்கிறார். அனைவரையும் சிரிக்க வைத்த விவேக்கை, அவரது மகன் பிரசன்ன குமார் அழவைத்து விட்டு போய்விட்டான்.

vivek

ஆம், கடந்த 40 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.பிரசன்னகுமார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நகைச்சுவை கலைஞர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் சோகம் இழையோடும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மகனை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கீழ்காணும் கவிதை வரிகளை காணிக்கையாக்குகின்றோம்.

மனிதா!

மரணத்தை கண்டு கலங்காதே!

ஏனென்றால், இந்தப் பூமியிலே வந்து

நீ பிறப்பதற்கு முன்னதாகவே

உனக்காக, உன் தாயின் இரண்டு தனங்களிலும்

பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.

நீ இறந்த பின்னும் உனக்காக

இன்னொரு உலகத்தையே கூட

அவன் படைத்து வைத்திருக்கக் கூடும்!

எனவே, மரணத்தை கண்டு கலங்காதே.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

Editor & Publisher,