உத்தர பிரதேசத்தில் 8 அமைச்சர்களை, முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கினார். மேலும், 9 அமைச்சர்களின் பதவிகளையும் அவர் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
உத்தர பிரதேச அரசில் 60 மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலுக்கு பிறகு மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று அதிரடியாக கேபினட் அந்தஸ்தில் உள்ள 5 அமைச்சர்களையும், 3 ராஜாங்க அமைச்சர்களையும் நீக்கினார்.
இந்நீக்கம் பற்றிய தன்னுடைய பரிந்துரையை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஆளுநர் மாளிகைக்கு நேற்று (29.10.2015) அனுப்பினார்.
இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும், புதிய அமைச்சர்கள் நாளை (31.10.2015) 10.30 மணிக்கு பதவி ஏற்பார்கள் என்றும், உத்தர பிரதேச ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.