ஏற்காடு, வாழவந்தி கிராமத்தில் உள்ள சேர்வராய்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஈவ்டீசிங் மற்றும் ஊழல் குறித்து விழிப்புணர்வு கூட்டம், கல்லூரி முதல்வர் மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு ஊழல் மற்றும் ஈவ்டீசிங் ஆகிய குற்றங்கள் குறித்தும், தகவல் அளிக்கவேண்டிய முறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர். கூட்டத்தின் நிறைவாக கணிணி துறை தலைவர் ஹரிஹரசுதன் நன்றி கூறினார்.
=நவீன் குமார்.