ரிசர்வ் வங்கி கவர்னரை மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி!  -வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு!

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

சுயாட்சி அமைப்பான, ரிசர்வ் வங்கிக்கு கவர்னர் மட்டுமே உள்ளார். தலைவர் பதவி கிடையாது. ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்து வருகிறார். நிதிக் கொள்கைக் குழு எடுக்கும் முடிவை, ரத்து செய்யும் அதிகாரம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உண்டு.

தற்போது, நாட்டின் பணவீக்க அளவுகோலின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கானரெப்போவட்டியைக் குறைக்கவோ, கூட்டவோ செய்கிறதுஇத்தகைய முடிவெடுக்கும் அதிகாரம், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மட்டுமே உள்ளது.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக, 2013, செப்டம்பர், 4-ல் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது.

தற்போது, பன்னாட்டு நிதியத்தின் தலைவராக உள்ள கிறிஸ்டியன் லகார்டே, அடுத்த ஆண்டு ஓய்வுபெறுகிறார். அமெரிக்கா ஆதரவளித்தால், ரகுராம் ராஜனுக்கு இப்பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா, 2007ல் சந்தித்த பொருளாதார நெருக்கடியை, 2005ல், முன்கூட்டியே கணித்து கூறியவர் ரகுராம் ராஜன். ரிசர்வ் வங்கி கவர்னராக அவர் பதவியேற்றதும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அதன் மூலம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தினார்

sswamy

இந்நிலையில் மத்திய அரசு, ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதை மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் மௌனமாக வேடிக்கைப் பார்த்து  வருகிறது.

பொருளாதார பாதிப்புக்கு, இத்தனை காலம், நிதி அமைச்சரை திட்டிக் கொண்டிருந்தவர்கள், இப்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் அதிகாரி மீது பாய்வது ஏன் என்று தெரியவில்லை.

வாழ்க்கையில் பாதி நாட்களை அந்நிய நாடுகளுக்கு ஆதரவாகவே பேசிவரும் சுப்பிரமணியன் சுவாமி, இப்போது  இந்தியாவின் உயிர் நாடியாக இருக்கும், ரிசர்வ் வங்கிக்குள் மூக்கை நுளைத்து குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளார். இவரது நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரசேகர் ஆட்சியின் போது போட்ட ஆட்டத்தை மறுபடியும் சுப்பிரமணியன் சுவாமி போட ஆரம்பித்து     விட்டார்.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சிக்கு, சுப்பிரமணியன் சுவாமி பல வகையில் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வருகிறார். ஆனாலும், பிரதமர் நரேந்திர மோதி, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பிரச்சனை என்னவென்றால், சுப்பிரமணியன் சுவாமியை உடன் வைத்திருந்தாலும் தொல்லை, எதிரே விட்டு வைத்தால் அதை விட தொல்லை என்று  பிரதமர்  நரேந்திர  மோதி  நினைக்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

நம் நாட்டு நலனை மட்டுமே சிந்திக்கும் நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு, பிரதமர் நரேந்திரமோதி செயல்படுவது அவருக்கும் நல்லது. நம் நாட்டுக்கும் நல்லது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com