இலங்கை சிறையில் வாடும் 86 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று இரவு கச்சத்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் படகுடன் சிறைப்பிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும், மீனவர்களை சிறைபிடிக்கும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தில் தனி கவனம் வேண்டும் என்றும், பாரம்பரியமான பகுதிகளில் பாதுகாப்பாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-கே.பி.சுகுமார்.