ஏற்காடு படகு இல்ல ஏரிக்கு அருகில், ஆழமான கழிவு நீர் கால்வாய் ஒன்று உள்ளது. இன்று (04.11.2015) மாலை மாடு ஒன்று அந்த வாய்க்காலில் விழுந்து கத்திக்கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயைணைப்பு துறையினர் கயிறு கட்டி அந்த மாட்டை மீட்டனர்.
– நவீன் குமார்.