243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு, 5 கட்டங்களாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதாதளம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளபோதிலும் நிதிஷ் குமாரே முதல்-மந்திரியாக தொடர்வார் என்று லாலு பிரசாத் யாதவ் கூறி உள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.