பொதுமக்கள் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினரை தலையில் அடித்தார்! ஓட்டுனரை காலால் எட்டி உதைத்தார்! -தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தின் வில்லத்தனம்!

vijayakandh-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க, கடலூர் மாவட்டத்திற்கு இன்று (14.11.2015) வருகை தந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், தன் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் இன்று அங்கு வந்தார். விஜயகாந்த் உதவிகள் வழங்கி வந்த நிலையில், மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால், வேகமாக நிவாரண பணிகளை முடித்துக்கொண்டு தன்னுடைய வாகனத்தில் (டெம்போ ட்ராவலர்) ஏறினார். அப்போது அவருடன் வாகனத்தில் ஏறிய பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்து மக்களைப் பார்த்து கையசைத்தார். இதைக் கண்டு கோபமடைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் நாக்கை கடித்துக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்துவை தலையில் தொடர்ந்து அடித்தார்.

பொதுமக்கள் கவனிக்கின்றனர் என்பதையும் மறந்து ‘சீக்கிரம் வண்டியை எடுடா’ என்று கூறி, வாகனத்தில் இருந்த ஓட்டுனரையும் காலால் எட்டி உதைத்தார். விஜயகாந்தின் இந்த செயலைப் பார்த்த பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் நடிகர் விஜயகாந்த், தினந்தோறும் கீழ்காணும் திருக்குறளை படிப்பது நல்லது.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.
விளக்கம்:சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி 
மாத்திரமின்றி, மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்: ஒருவர் தன்னைத்தானே காத்துக் கொள்ள 
வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். 
இல்லையேல் சினம், அவரை அழித்துவிடும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com