ஆந்திரா மாநிலம், சித்தூர் மாநகர மேயராக இருப்பவர் அனுராதா. இன்று (17.11.2015) காலை சித்தூர் மேயர் அலுவலகத்தில் அவர் பணியில் இருந்தபோது, அவரை குறிவைத்து மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அனுராதா உயிரிழந்தார்.
அவருடைய கணவர் கட்டாரி மோகன் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கி சூட்டை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்று தெரியவரவில்லை. அப்பகுதி முழுவதும் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.