தமிழக அரசின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் ஏற்காடு, முருகன் நகர் கிராமத்தில் இன்று தொடங்கியது. முகாமை ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஏற்காடு வீட்டு வசதி சங்க தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் 260 பேருக்கு பொது மருத்துவ சோதனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாம் சனிக்கிழமை ஜெரீணாக்காடு கிராமத்திலும், ஞாயிற்றுக்கிழமை லாங்கில் பேட்டை கிராமத்திலும் நடைபெறவுள்ளது.
–நவீன்குமார்.