ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் மற்றும் லேசான மழை!

ye2911P1

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று அதிகாலை முதல் மதியம் வரை கடும் பனிமூட்டம் நிலவியது. சாலையில் 10 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.

இதனால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். மதியத்திற்கு மேல் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் அவர்களது வீடுகளிலேயே முடங்கினர்.    

-நவீன் குமார்.