ஏற்காட்டில் இருந்து கடலூருக்கு நிவாரணப் பொருட்கள்!

ye0512P1கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்காட்டில் இருந்து நிவாரண பொருட்கள் எடுத்து செல்லப்பட்டது.

கடந்த சில தினங்களாக மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்காக ஏற்காடு பகுதி பொதுமக்களிடம், ஏற்காட்டை சேர்ந்த பெருமாள், ராஜேந்திரன், காமராஜ், விஜயன், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த இரு தினங்களாக நிவாரண பொருட்களை சேகரித்தனர். நேற்று 6000 சப்பாத்திகள், 1000 உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டன.

இந்த பொருட்களை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து பேக் செய்து ஒரு லாரி மூலம் இரவு 10 மணியளவில் கடலூருக்கு 25 நபர்கள் புறப்பட்டனர். இவர்கள் இன்று கடலூர் மக்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினர்.            

-நவீன் குமார்.