ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு விலை வீழ்ச்சி!-விவசாயிகள் கவலை!

ye1112P1ye1112P2

ஏற்காட்டில் விளையும் கமலா ஆரஞ்சு விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் கவலையடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதிகளில் காபி பயிருக்கு அடுத்தப்படியாக கமலா ஆரஞ்சு பழங்கள் பிரதானமாக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது. வருடந்தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கமலா ஆரஞ்சு பழங்கள் அறுவடை செய்யப்பட்டு சேலத்தில் உள்ள பழ மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சில தோட்டங்களில் அதன் உரிமையாளர்களே பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர். பல தோட்டங்களில் பழங்களை குத்தகைதாரர்கள் குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து விற்ப னை செய்கின்றனர்.

கமலா ஆரஞ்சு பழங்கள் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுவது கிடையாது. கூடை கணக்கில்தான் விற்பனை செய்யப்படுகிறது. கமலா ஆரஞ்சு பழங்கள் கடந்த ஆண்டு ஒரு கூடை ரூ.600 வரை விலை கிடைத்ததாகவும். இந்த ஆண்டு பெரிய ரக பழங்கள் கூடை ரூ.300, மேலும், சிறிய ரக பழங்கள் கூடை ரூ.100 விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். 

மேலும் கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான கூடை கமலா ஆரஞ்சு பழங்கள் மரத்தில் இருந்து கீழே கொட்டி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். விவசாயிகளை விட, குத்தகைதாரர்களே குத்தகைக்கு கட்டிய பணத்தை கூட மீட்டெடுக்க முடியாமல் நஷ்டமடைந்துள்ளனர்.      

காபி அறுவடையில் ஈடுப்பட்டு வரும் தொழிலாளர்கள்!

ye1112P3

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் நேற்று வரை தினசரி தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், கடந்த மாதம் முழுவதும் தோட்ட தொழிலாளர்கள் கிடைக்காமல் பல எஸ்டேட்டுகளில் காபி அறுவடை செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் வெயில் நிலவியதால் இன்று முதல் பல எஸ்டேட்டுகளில் தோட்ட தொழிலாளர்கள் காபி அறுவடை செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.       

-நவீன் குமார்.