தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுடன், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆலோசனை!

pr131215d (1)Draft Press ReleaseDraft Press Release2Draft Press Release3

மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த சென்னை உள்ளிட்ட நகரங்கள் புரனமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.4500 கோடி தேவை என்று மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கோரியுள்ளார். 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்த மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரி வெங்கைய்யா நாயுடு முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த சென்னை நகரில் புரனமைப்பு செய்வதற்காக மத்திய நகர்புற மேம்பாட்டு துறையிடம் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ரூ.4500  கோடி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, சென்னை உள்ளிட நகரங்களில் வெள்ளம் மற்றும் மழைநீரினால் பாதிப்படைந்த சாலைகள், குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் குறித்து விளக்கிய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, நகர்ப்புற கட்டமைப்புகளை சீர்செய்ய கணிசமான உதவி தேவைப்படுவதாக வெங்கைய்யா நாயுடுவிடம் வலியுறுத்தினார்.

அதற்காக முதற்கட்ட கணக்கெடுப்பின் படி ரூ.4,500 கோடி தேவைப்படும் என்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். 

மேலும், அடையாறு, கூவம் ஆறுகளின் கரையோரங்களில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும், பாதிப்புக்குள்ளான 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று வீடு திட்டம் நடைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பாதிப்படைந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கும் நிதி தேவைப்படும் என்றும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடுவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

-ஆர்.மார்ஷல்.