ஏற்காட்டில் மூன்று விதமான சீதோஷ்ண நிலை!

ye1412P1ye1412P2

ஏற்காட்டில் இன்று (14.11.2015) காலையில் பனி, மாலை வரை கடும் வெயில், மாலை 5 மணிக்கு மழை, இப்படி மூன்று விதமான சீதோஷ்ண நிலைகள் நிலவியது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று அதிகாலையில் கடுமையான பனி பொழிந்தது. காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர். காலை 10 மணிக்கு பின்னர் மாலை வரை கடும் வெயில் நிலவியது. ஒரு மாதமாக பெய்து வந்த மழையினால் அவதிக்குள்ளாகி இருந்த மக்கள் வெயிலை சந்தோஷமாக அனுபவித்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மாலை 5 மணிக்கு திடீரென அரை மணி நேரம் வரை கனமழை பெய்தது.

 -நவீன் குமார்.