குடியரசு தின தடகள போட்டிகளில் மாண்போர்ட் சமுதாய பள்ளி மாணவர்கள் சாதனை!

y2112P1

குடியரசு தின தடகள போட்டிகளில் ஏற்காடு மாண்போர்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்.

கோவையில் நடைப்பெற்ற 58 ஆவது குடியரசு தின தடகள் போட்டிகளில் ஏற்காடு, கொம்புதூக்கி மாண்போர்ட் சமுதாய பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மேல்மூத்தோர் பிரிவில் பங்கேற்ற சண்முகம் 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கபதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.

சவிதா எனும் மாணவி 3000 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களையும், போட்டிகளில் பங்கேற்றவர்களையும் மாண்ட்போர்ட் தென்மண்டல சபை தலைவரும், பள்ளி முதல்வருமாகிய ஜார்ஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.    

 -நவீன் குமார்.