திருச்சி, காட்டூர், புனித அந்தோணியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ‘கிறிஸ்மஸ்விழா’ கொண்டாட்டம் இன்று (22.12.2015) காலை சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சகோதரி.தேன்மொழி, பள்ளி தலைமையாசிரியர் சகோதரி.ஜெமிலா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அதேபோல், காட்டூர், புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியிலும் இன்று கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருள்திரு.அல்போன்ஸ், பள்ளி தலைமையாசிரியர் சகோதரி.நிர்மலா, சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மத்திய ரோட்டரி சங்கத்தலைவர் எஸ்.பி.ராமசாமி, செயலாளர் ஆலன்தீன், பள்ளியின் முன்னாள் மாணவர் மோசஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.
-M.அன்பரசன்.