தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் இன்று (23.12.2015) காலை 11 மணியளவில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ தலைமையில், சிபிஐ (எம்) மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்தனர்.
மக்கள் நல கூட்டணிக்கு, தே.மு.தி.க. வரவேண்டும் என்ற கோரிக்கையோடு சென்ற இவர்களுக்கு, நடிகர் விஜயகாந்த் எந்த பிடியும் கொடுக்காமல், வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்ததோடு, இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் தனக்கு ஏகப்பட்ட கிராக்கி இருப்பதாக காட்டிக்கொள்வதற்கு, இவர்களின் சந்திப்பு நிச்சயமாக பயன்படுமே தவிர, இதனால் மக்கள் நல கூட்டு இயக்கத்தினருக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
பா.ஜ.க.விடமோ, காங்கிரசிடமோ அல்லது தி.மு.க.விடமோ கூட்டணி பேரத்தை உயர்த்தி, எங்கு வியாபாரம் படிகிறதோ அங்கு தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் ஐக்கியமாகிவிடுவார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com