ஏற்காட்டில் கடும் பனி மூட்டம்!  -படகு சவாரி தாமதம்!

ye2712P3

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று அதிகாலை முதல் கடும் பனி மூட்டம் நிலவி வந்தது.  பனி மூட்டம் காலையில் விலகி விடும் என்று அனைவரும் நினைத்த நிலையில், மதியம் வரை பனி மூட்டம் விலகாமல் இருந்தது. படகு இல்லம் எப்போதும் போல காலை 9 மணிக்கே திறக்கப்பட்டது.

ஆனால், அருகில் இருப்பவர் கூட கண்களுக்கு தெரியாத அளவிற்கு, பனி மூட்டம் நிலவியதால், படகு சவாரி தாமதமாக (11மணிக்கு) துவங்கப்பட்டது.

மேலும், பனி மூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். மதியம் சற்று லேசான சூரிய ஒளி உண்டானதால் மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் காணப்பட்டனர்.            

   -நவீன் குமார்.