தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (30.12.2015) மாலை 3 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர்.
அ.இ.அ.தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நாளை( டிசம்பர் 31-ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
எதிர்வரும் (2016) சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க தனித்தேப் போட்டியிடும் என்ற அறிவிப்பு, தீர்மானமாக இக்கூட்டத்தில் நிச்சயம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை, மத்திய உளவுதுறையின் மூலம் தாமதமாகத் தெரிந்துக் கொண்ட பா.ஜ.க.வினர், அவசர, அவசரமாக இன்று தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த்தை வீட்டில் சந்தித்து உள்ளனர்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com