ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழா அன்று இந்தியா முழுவதும் தேசிய கொடிகளை மாணவர்களும், மக்களும் பயன்படுத்துவர். இந்த தேசிய கொடிகள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் செய்யப்படுகிறது. இதனால், மண்ணுக்கும், மண்ணில் வாழும் உயிர்களுக்கும், இயற்கைக்கும் தீங்கு ஏற்படுகிறது.
இதனால், ஏற்காட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் தியாகு தாமஸ், கடந்த 25 நாட்களாக பேப்பரை பயன்படுத்தி தேசிய கொடிகளை தயார் செய்து வருகிறார்.
இவ்வாறு இவர் தயார் செய்யும் 4000 பேப்பர் தேசிய கொடிகளை பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக விநியோகிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இவர் ஏற்கனவே ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-நவீன் குமார்.