ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கக்கோரி பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு பேரவை, பிராணிகள் நல வாரியம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. அதேபோல், விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றதா? என்பதை உறுதிப்படுத்தவும், பிராணிகள் நல வாரியத்தின் அதிகாரிகளை நியமிக்கலாம் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
போட்டிகளின்போது கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கில், அனைத்துத்தரப்பு வாதங்களும் 24.04.2014 ஆம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் 07.05.2014 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
உச்சநீதி மன்ற தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் மேலானப் பார்வைக்கு மீண்டும் இங்கு இத்துடன் இணைத்துள்ளோம்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் விளக்கம்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com