தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில், பிரதமர் நரேந்திரமோதி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லியில் இருந்து பதன்கோட் வந்த பிரதமர் நரேந்திரமோதியை, பாதுகாப்பு படை அதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிரவாதிகள் ஊடுருவிய பாதை மற்றும் தாக்குதல் நடத்திய இடங்கள் விமானப்படை தளவாடங்கள் வைக்கபட்டிருக்கும் பகுதிகள் போன்றவற்றை பிரதமர் நரேந்திரமோதி ஆய்வு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோதி பதன்கோட் வந்ததையொட்டி விமானப்படை தளத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், பஞ்சாப்பையொட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
-எஸ்.சதிஸ் சர்மா.