இலங்கை மன்னார் மாவட்ட விசேட போதை வஸ்து குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, மன்னார் மாவட்ட சிரேஸ்ட போலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பாலியாற்று பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த இளைஞரிடம் இருந்து இரண்டு கஞ்சாப் பாக்கெட்டுகளை போலிசார் கைப்பற்றியுள்ளனர். அவை 4 கிலோ 160 கிராம் எடை கொண்டதெனவும், இது பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்றும், மன்னார் மாவட்ட விசேட போதை வஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-வினித்.