சேலம் மாவட்டம், ஏற்காடு திரு இருதய ஆண்டவர் ஆலய கூடத்தில், இளந்தென்றல் நண்பர்கள் குழு, கோல்டன் ஜீப்ளி, சேலம் கிழக்கு, மெல்வின் ஜோன்ஸ் ஆகிய அரிமா சங்கங்கள் மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை அர்விந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தினர்.
இந்த முகாமில் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 145 பேர் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 10 பேர் இலவச கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக அர்விந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இளந்தென்றல் குழுவினர் இலவச உணவு பொட்டலங்களை வழங்கினர்.
-நவீன் குமார்.