மருத்துவக் கல்லூரி மாணவிகளின் மரணத்தில் மர்மம்! -பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் காவல்துறை!

medical college student death spotS.V.S Medical College Of Yoga And Naturopathy And Research Institute, student sucide 2S.V.S Medical College Of Yoga And Naturopathy And Research Institute, student sucide 3S.V.S Medical College Of Yoga And Naturopathy And Research Institute, student sucide 1

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் S.V.S Medical College Of Yoga And Naturopathy And Research Instituteஎஸ்.வி.எஸ். இயற்கை (நேச்சுரோபதி) மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தனர்

இந்நிலையில் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகி 3 பேரும் 23.01.2016 மாலை கல்லூரியின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சின்னசேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்அவர்கள் மாணவிகளின் பிணத்தை மீட்டனர்பின்னர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன

இந்நிலையில், மாணவிகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும், மாணவிகளின் பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

இதுக்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாணவிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரிய வரும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com